கங்கையில் பிசினஸ் செய்ய ஜெர்மனி விருப்பம்


புதுடில்லி: மோடி அரசின் கனவுத்திட்டமான கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தில் பங்கெடுக்க ஜெர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ஜெர்மனி துணைத்தூதர் மிக்கேல் ஓட், கங்கை தொடர்பான இந்தியர்களின் சென்டிமென்ட், இதில் ஜெர்மனி பிசினஸ் செய்வதை ஈர்த்துள்ளது. கங்கையை சுத்தப்படுத்தும் பணியில் இந்தியாவுக்கு உதவ ஜெர்மனி ஆர்வமாக உள்ளது. 1232 கி.மீ., நீளம் கொண்ட ஐரோப்பாவின் மிக நீளமான நதியான ரைன் நதியை சுத்தப்படுத்திய அனுபவம் ஜெர்மனிக்கு உண்டு. தற்போது ரைன் நதி குடிநீர் தேவைக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே கங்கையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட ஜெர்மனி மிகவும் ஆவலாக உள்ளது. இவ்வாறு மிக்கேல் தெரிவித்தார். ரூ. 2037 கோடி செலவில் கங்கையை சுத்தப்படுத்தும் பணியை மத்திய அரசு துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments