புதுடில்லி: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ராஜ்யசபாவுக்கே
வருவதில்லை என்ற விமர்சனம் எழுந்த சில நாட்களில் நடப்பு கூட்டத் தொடரில்
கலந்து கொள்ளாமல் இருக்க லீவு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இவரது
கோரிக்கையை ஏற்று சபை தலைவர் லீவு அனுமதி அளித்தார். தனக்கு மருத்துவ
ரீதியான பிரச்சனை இருப்பதாக தனது வேண்டுகோளில் கூறியது ஏற்று
கொள்ளப்பட்டது. சிறப்பு அந்தஸ்து கொண்ட இது போன்று எம்.பி.,க்கள் நடந்து
கொள்வது சரிதானா என்ற விவாதமும் ஒரு புறம் துவங்கியிருக்கிறது. கடந்த காங்., ஆட்சி காலத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், ஓட்டு பெறும் முயற்சியாகவும், சில நட்சத்திரங்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி., பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சினும் எம்.பி.,பொறுப்பை பெற்றார்.
ஆனால் பதவி கிடைத்த நாள் முதல் சச்சின் அவைக்கு வராமல் இருந்து வந்தார். ஒரு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை. இது குறித்து அரசியல் ரீதியாக விமர்சனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழுந்தது. இதனையடுத்து சச்சின் லீவு கேட்டு விண்ணப்பித்தார். இதனை அவைத்தலைவர் குரியன் அமீது அன்சாரி ஏற்று கொண்டார்.
Comments