அவதூறு செய்தி:விஜயகாந்த் கண்டனம்

மதுரை:இலங்கை ராணுவ இணைய தளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கேலிச் சித்திரத்துடன் சில ஆட்சேபகரமான வார்த்தைகளால் இடம்பெறச்செய்திருந்ததற்கு தே.மு.தி.க., தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடந்த போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன் சில ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.

Comments