தலைக்கு மேலே வெள்ள அபாயம்: பீகாரில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை

பாட்னா: கோசி நதியில், மண்சரிவால் ஏற்பட்ட செயற்கை அணையில் எந்த நேரமும் உடைப்பு ஏற்படலாம் என்பதால், பீகாருக்கு பெரும் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. உயிர்ப்பலியை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் மும்முரமாக உள்ளன.

கனமழை காரணமாக கோசி நதியில் பெரும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, கோசி நதியின் குறுக்கே 10 மீட்டர் உயரம் கொண்ட, ஒரு செயற்கை அணை உருவாகி உள்ளது. மண்ணால் ஆன இந்த அணையில் தற்போது 17 லட்சத்திற்கு அதிகமான டி.எம்.சி., நீர் தேங்கி உள்ளது. இந்த மண் அணை எந்த நேரமும் உடைந்து, கோசி நதியில் பெரும் வௌ்ளம் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி பெரும் வௌ்ளம் வந்தால், அதனால் பீகாரின் சுபால், சஹர்ஷா, மதேபுரா, காகரினா, பகல்பூர், அராரியா, பூர்ணியா, மதுபானி என்ற எட்டு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படும். சேட்டிலைட் மூலம் கிடைத்த தகவலின்படி அணை எந்த நேரமும் உடையலாம் என்பதால், இந்த மாவட்டங்களில், கரையோர பகுதிகளில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

பீகார் முதல்வர் ஜீத்தன் ராம் மன்ஜி, ஹெலிகாப்டர் மூலம் வௌ்ள அபாயத்தால் பாதிக்கப்பட உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினார். சேதங்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மன்ஜியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'கோசி நதியில் வௌ்ள அபாயம் ஏற்பட்ட உடன் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும், தேவையான உதவிகளை மத்திய அரசு உடனடியாக செய்யும் என்றும் கூறினார்.

பீகார் வௌ்ள அபாய பகுதிகளுக்கு 8 ராணுவ படை பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோசி நதியின் வௌ்ள பெருக்கு குறித்து நேபாள அரசிடம் இருந்து அவ்வப்போது தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. வௌ்ள அபாயம் குறித்து பீகார் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், நேபாளத்தில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. சரியான நேரத்தில் வௌ்ள அபாயம் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது,' என்றார்.

நிவாரண முகாம்கள் தயார்: வௌ்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து வௌியேற்றப்படுபவர்களுக்காக, மாநில அரசின் சார்பில் 84 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மாநில அரசு துறைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. வௌ்ள அபாயம் காரணமாக நேபாளம் மற்றும் பீகாரில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வௌ்ளம் குறித்த தகவல் பரிமாற்றத்திற்காக, பீகார் அரசுக்கு 15 சேட்டிலைட் போன்களை மத்திய அரசு வழங்கி உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments