பெங்களூரு: நவீன தொழில்நுட்பத் துறையில் பல புரட்சிகளை செய்துள்ள
ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர்களில் 3 ல் ஒரு பங்கு பொறியாளர்கள்
இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் 171 பில்லியன் டாலர்
பொறியியல் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் 3ல் ஒரு
பங்கு பொறியாளர்கள் இந்தியர்களாக உள்ளனர்.
அந்நிறுவனத்தின் மென்பொருள், சேவை மற்றும் துணைச் சேவை ஊழியர்களின் விகிதம்
அதிகரிக்கும்போது, இந்தியப் பொறியாளர்களின் விகிதமும் கணிசமாக
அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஹெச்-1பி விசா மூலம் 2001லிருந்து 2010 வரை 1750
பேர் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். அதே சமயம்
2011-13 ல் 2800 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட ஹெச் எப்.எஸ்
ஆராய்ச்சியில் இந்திய பொறியாளர்கள் ஐபோன் மற்றும் ஐபாட் தயாரிப்பாளர்
சார்பு சமீப ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் படி, 47000 இந்தியர்கள் நேரடியாக அமெரிக்காவின் ஆப்பிள்
நிறுவனத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். 7700 பேர் கஸ்டமர் சப்போர்ட் பணியில்
இருக்கின்றனர். 27350 பேர் ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனை
மையங்களில் பணிபுரிகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
Comments