புதுடில்லி:2014-லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு 236 இடங்கள் கிடைக்கும்.இதில் பா.ஜ.,வுக்கு மட்டும் 217
இடங்கள் கிடைத்து தனிப்பெருங்கட்சியாக இருக்கும். என ஏபிபி நியூஸ்-நீல்சன்
நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.காங்கிரஸ் கூட்டணி 92 சீட்கள்:
பிரதமர் பதவிக்கு யார் வேண்டும்:பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 57 சதவீதம் பேர் ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுலுக்கு ஆதரவாக 18 சதவீதம் பேர் ஆதரவாகவும் கெஜ்ரிவாலுக்க ஆதரவாக 3 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.இது தவிர திரணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,19 இடங்களிலும் பிஜூ ஜனதா தளம் 16 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
தே.ஜ., கூட்டணி, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அதனால்தான் கூட்டணி பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி 88 சீட்களை பெற முயற்சி செய்து வருகிறது. இப்பகுதிகளில் வடக்கில் ஐ.மு.கூட்டணிக்கு 23ம் மேற்கில் 22 என கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் வடக்கில் மொத்தம் உள்ள 151 சீட்களில் 40 வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.மேற்கில் உள்ள 116 சீட்களில் 6 இடங்களை பிடிக்க முற்படும் என கருத்து கணிப்பு கூறுகிறது.
தெற்கு பிராந்தியத்தில் 21 சீட்கள் இக்கூட்டணிக்கு கிடைக்கலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளும் ஆந்திராவில் டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) இடது சாரிகள் 15 சீட்களை பெற்று விடும்.தென்னகத்தை பொறுத்த மட்டில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகிறது. மொத்தம் உள்ள 134 ல் ஐ.மு.,23 இடங்களையும் தே.ஜ.,21 இடங்களை பெறலாம் என்கிறது கருத்து கணிப்பு.
Comments