புதுடில்லி: பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க., பொதுச் செயலர்,
வைகோ, டில்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, லோக்சபா தேர்தல்
கூட்டணி குறித்தும், தொகுதி உடன்பாடு குறித்தும், பேசியதாக தெரிகிறது.
தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், முதல் கட்சியாக, ம.தி.மு.க.,
இணைந்துள்ளது.
ஆனாலும், எந்தெந்த தொகுதிகளி?ல் போட்டியிடுவது என்பது
குறித்து, இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், ம.தி.மு.க., பொதுச்செயலர்,
வைகோ, நேற்று டில்லிக்கு வந்தார். பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்கை, அவர்
இல்லத்தில் சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது,
தொகுதி பங்கீடு, வண்டலூரில் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம்
குறித்து, பேசப்பட்டதாக தெரிகிறது. இரு கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு வெளி
வருவதற்கு முன், ஒரு முறை, டில்லிக்கு வந்த வைகோ, ராஜ்நாத் சிங்கை, வைகோ
சந்தித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments