தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார்!
கோவை: கொடநாட்டில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையிலிருந்து கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை கவனித்து வந்த முதல்வர், குன்னூரில் நடைபெற்ற விலையில்லாப் பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்ததோடு, கோத்தகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) காலை கொடநாடு எஸ்டேட்டிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பிற்பகலில் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. கொடநாடு எஸ்டேட்டிலிருந்து கார் மூலம் கர்சன் எஸ்டேட்டிலுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வரும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் சென்னை திரும்புவதையொட்டி கொடநாடு எஸ்டேட்டிலிருந்து கர்சன் எஸ்டேட் ஹெலிகாப்டர் தளம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments