மகனின் உயிரை பறித்த தந்தையின் குடி

வீட்டில் தந்தை மறைத்து வைத்திருந்த மதுபானத்தை குளிர்பானம் என நினைத்து குடித்த 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் அருகேயுள்ள மஞ்சக்காளை பகுதியை சேர்ந்தவர் லாஜன்,சூசன் தம்பதியினரின் மகன் லிஜின் (8). இச்சிறுவன் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.


குடிப்பழக்கமுடைய ராஜன், மதுபானத்தை வாங்கி வீட்டில் மறைத்து வைத்து அவ்வப்போது குடிப்பார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டிலிருந்த சிறுவன் பீரோவை திறந்தபோது மது பாட்டில் இருந்தது.

தந்தை குளிர்பானம் வாங்கி வைத்திருப்பதாக கருதிய லிஜின், அந்த மதுவை குடித்தான். சிறிது நேரத்தில் போதை ஏறி மயங்கி விழுந்தான். இதனிடையே வெளியே சென்ற அவனது பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது, லிஜின் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து குன்னிக்கோடு பொலிசார் சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments