
நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மதுரை அருகே திருநகரில் நேற்று நடந்தது.
இதில் இக்கட்சியின் நிறுவன தலைவரும், நடிகருமான கார்த்திக் கலந்து
கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற
தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும். கூட்டணி குறித்து முக்கிய
கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் முடிவை அறிவிப்போம்.
எங்கள் கட்சிக்கு பல மாவட்டங்களில் நல்ல ஆதரவு உள்ளது. சென்னையிலும்
அதிக ஆதரவு உள்ளதால் நான் அங்கு போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது
விரைவில் அறிவிக்கப்படும் என்றும் புதிய நிர்வாகிகள் அறிவிப்புக்குப்பின்
சிவகாசி, ராஜபாளையம் உள்பட பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும்
கூறியுள்ளார்.
Comments