சிந்துசமவெளி எனும் சர்ச்சை படத்தில் நடித்து சர்ச்சைக்குள் சிக்கியவர்
அமலாபால். ஆனால், அதையடுத்து பிரபுசாலமனின் மைனா படத்தில் நடித்த பிறகு
அவர் மீது விழுந்த அந்த கறை காணாமல் போனது. அமலாபாலும் டீசன்டான நடிகையாக
வலம் வருகிறார். ஆனபோதும, கதை விசயத்தில் ரொம்ப கவனமாக இருந்து
வருகிறார். இந்த நேரத்தில், அவரை சந்திக்கும் மீடியாக்கள் திருமணம் குறித்த அமலாபாலிடம் கேட்கிறார்களாம். அதற்கு அவர் சொல்லும் பதில், எனக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. 22 வயதுதான் ஆகிறது என்கிறாராம். மேலும், திருமணம் என்பது சாதாரண விசயமல்ல. அதன்பிறகுதான் வாழ்க்கையே தொடங்குகிறது. அதனால் எனது திருமணத்தில் நான் ரொம்ப கவனமாக இருப்பேன். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் முடிவு செய்யும் மாப்பிள்ளையை மட்டும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.
காரணம், அப்படி பார்க்கும் மாப்பிள்ளை எப்படிப்பட்டவராக இருப்பார் என்பது எனக்குத்தெரியாது. அதனால் பல நடிகைகளின் வாழ்க்கையில் நடப்பது போன்று என் வாழ்க்கையிலும் சலசலப்பு ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடியும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், என்னுடன் நன்கு பழகிய, என்னைப்பற்றி நன்கு தெரிந்த ஒருவரையே திருமணம் செய்து கொள்வேன். அப்படி நான் தேர்வு செய்யும் நபரை, சில வருடங்களாவது கண்டிப்பாக காதலித்து அதன்பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் அமலாபால்.
Comments