
போலார் வோர்டெக்ஸ் 2
இம்முறை தாக்கிய போலார் வோர்டெக்ஸ் 2 முன்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்
இம்முறை கடுங்குளிர் காற்றுடன், பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்த தடவை
நியூயார்க் நகரம் தான் பனிப்புயலில் சிக்கித் தவித்து வருகிறது.
பனிக்காடு
நியூயார்க்கில் திரும்பும் திசை எல்லாம் பனிக்காடாக உள்ளது. முன்னதாக
நியூயார்க்கில் 5 இன்ச் அளவுக்கு பனி இருந்தது தான் அதிக அளவாக இருந்தது.
ஆனால் நேற்று நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் இதுவரை இல்லாத
அளவுக்கு 7.1 இன்ச் அளவுக்கு பனி இருந்தது.
மேலும் பனி
ஏற்கனவே பல்வேறு இடங்கள் பனியில் மூடியிருக்கும் நிலையில் இன்று மேலும்
பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் கவலை
அடைந்துள்ளனர்.
Comments