சென்னை : லோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஒரு ஆண்டு
சிறைத் தண்டனை அளிக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.
நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:'அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டு உரிமையை விற்பனை செய்யாதீர்' என, மக்களிடம் பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுக்கு பணம் வாங்கினால், 1
ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். அதேபோல், பணம் கொடுப்போர் மீதும், கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலில், பணம் கொடுத்ததாக, 300
பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்குகளில், குற்றப்பத்திரிகை
தாக்கல்செய்யப்பட்டுள்ளது;தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது. நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:'அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டு உரிமையை விற்பனை செய்யாதீர்' என, மக்களிடம் பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை:
இன்று
முதல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுச் சாவடிகளில்
வழங்கப்படும். ஓட்டுச்சாவடிக்கு செல்ல முடியாதவர்களுக்கு, ஓட்டுச்சாவடி
அலுவலர், வீட்டிற்கு சென்று வழங்குவார். இப்பணி, 1 மாதத்திற்கு
நடக்கும்.அதன்பின்னரும்,அடையாள அட்டை கிடைக்காதவர்களுக்கு, குறிப்பிட்ட
மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.வாக்காளர் அடையாள அட்டை
வாங்காதவர்களின் பெயர், இணையதளத்தில் வெளியிடப்படும்.வாக்காளர் பட்டியலில்,
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு,
10 நாள் முன் வரை, விண்ணப்பம் வழங்கலாம். வாக்காளர் அடையாள அட்டை அல்லது
பூத் சிலிப் உள்ளவர் மட்டுமே, ஓட்டு போடமுடியும், என்றார்.
Comments