வருமான வரி தாக்கல் செய்யாத குற்றம் ; விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்; ஜெ.,வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கடந்த 1991 முதல் 94 வரையிலான காலத்தில் ஜெ., தனது சொத்து மற்றும் வருமான
வரி தாக்கல் செய்யாமல் இருந்து வந்தார். இது தொடர்பாக வருமான
வரித்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் இந்த வழக்கிற்கு தடை விதிக்க
வேண்டும் என்றும், இந்த வழக்கில் இருந்து தமக்கு விலக்கு அளிக்க வேண்டும்
என்று கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருமான வரி தாக்கல் செய்யாதது ஒரு குற்றம்
ஆகும். எனவே இதிலிருந்து ஒதுங்கி செல்ல முடியாது. விசாரணையை சந்திக்க
வேண்டும். இந்த வழக்கை, சம்பந்தப்பட்ட கீழ்கோர்ட், 4 மாத காலத்திற்குள்
முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் ஜெ.,வின் மனு தள்ளபடியானது. இதற்கு எதிராக
சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்
சசிகலாவும் ஒரு குற்றவாளி ஆவார். சசி எண்டர்பிரைசஸ் மீதும் வருமானவரிதுறை
வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments