கச்சத்தீவு விவகாரம் முடிந்து போன ஒன்று: மத்திய அரசு

சென்னை: கச்சத்தீவு விவகாரம் முடிந்த போன ஒன்று என மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது. இது தொடர்பான மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த வெளியுறவுத்துறையின் துணை செயலாளர், 1974 ஒப்பந்தன்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை. 1976ம் ஆண்டிலேயே கச்சத்தீவிற்கு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.
கச்சத்தீவு விவகாரம் முடிந்த போன ஒன்று, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து மனு மீதான விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Comments