புதுடில்லி : மேற்கு மற்றும் ம்த்திய இந்தியாவில் காங்கிரசை பின்னுக்கு
தள்ளி, பலம் பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளதாக தேர்தல் கருத்து
கணிப்புக்கள் கூறுகின்றன. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடி தலைமையில்
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளப் போகும் பா.ஜ., குஜராத், மத்திய பிரதேசம்,
மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக மாபெரும் வெற்றி
பெறும் என கூறப்படுகிறது.
அதேசமயம் கிழக்கு, தெற்கு மாநிலங்களைப் பொறுத்த
வரை பிராந்திய கட்சிகளும், சிறிய கட்சிகளும் வெற்றி பெற்று அதிகளவிலான
இடங்களை கைப்பற்றும் எனவும், மத்தியில் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு
வகிக்கும் எனவும் கருத்துகணிப்பு கூறுகிறது.குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 335 லோக்சபா இடங்கள் உள்ளன. நாடு முழுவதும் வீசத் துவங்கி உள்ள மோடி அலை காரணமாக இந்த மாநிலங்களில் பா.ஜ., பெரிய அளவில் வெற்றியை பெற்று, பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது. கிழக்கு, தெற்கு, மேற்கு அல்லது மத்திய பகுதி மாநிலங்களைக் கொண்டு சென்னை கணித கழக இயக்குனரும், பேராசிரியருமான ராஜீவ் கரந்திகர் கூறியுள்ள புள்ள விபரப்படி, லோக்சபா தேர்தலில் பிராந்திர மற்றும் சிறிய கட்சிகள் சுமார் 107 முதல் 195 இடங்கள கைப்பற்றும் என கூறப்படுகிறது.
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் பா.ஜ.,விற்கு 90 முதல் 125 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரசுடனான போட்டி கடுமையாக உள்ளதால் அவர்கள் 50 முதல் 101 இடங்களை கைப்பற்றுவார்கள் என தெரிய வந்துள்ளது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னர் வடஇந்தியாவிலும் பா.ஜ., பலம் அதிகரித்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், பீகார், மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ., மிகப் பெரிய வெற்றியை பெறும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. கர்நாடக தேர்தலில் பா.ஜ., வின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். ஆனால் ஒடிசா (நவீன் பட்நாயக்), மேற்குவங்கம் (மம்தா பானர்ஜி), தமிழகம் (ஜெயலலிதா) மற்றும் ஆந்திரா (கிரண்குமார் ரெட்டி) ஆகிய மாநில முதல்வர்கள் 3வது அணி அமைத்து, பிரதமராகும் கனவில் இருப்பதால் பா.ஜ., விற்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்புள்ளது. கேரளாவில் பா.ஜ., ஏறக்குறைய வெளியேற்றப்பட்டு விட்டது என்றே கூறலாம்.
மற்றொரு முக்கிய தேசிய கட்சியான காங்கிரசிற்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளே பலம் நிறைந்ததாக உள்ளதால், லோக்சபா தேர்தலுக்கு பின் புதிய அரசு அமைவதில் இந்த பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். ஜார்கண்ட் மற்றும் அசாமில் பா.ஜ.,வும் காங்கிரசும் சமஅளவு பலத்துடனேயே காணப்படுகின்றன. அதன்படி பா.ஜ., ஜார்கண்ட் மாநிலத்தில் 40 சதவீதம் ஓட்டுக்களையும், சட்டீஸ்கரில் 50 சதவீதம் ஓட்டுக்களையும் பெறும் என கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 535 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., சிவசேனா கூட்டணி - 90 முதல் 125 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 50 முதல் 101 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 7 முதல் 13 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதா தளம் 6 முதல் 10 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 20 முதல் 28 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் 9 முதல் 21 இடங்களையும், பிஜூ ஜனதா தளம் 10 முதல் 16 இடங்களையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 4 முல் 8 இடங்களையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 11 முதல் 19 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 9 முதல் 15 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி 4 முதல் 8 இடங்களையும், அதிமுக 15 முதல் 23 இடங்களையும், திமுக 7 முதல் 13 இடங்களையும், மற்ற கட்சிகள் 5 முதல் 21 இடங்களையும் கைப்பற்றும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
Comments