பேஸ்புக்கை விட்டு வெளியேறிய இளசுகள்

பெற்றோரின் கண்டிப்பாலும், தீவிர கண்காணிப்பாலும் 30 லட்சம் இளம் வயதினர் பேர் பேஸ்புக்கிலிருந்து விலகியுள்ளனர்.

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் வாயிலாக ஒருவருடன் மற்றொருவருடன் எளிதாக தொடர்பு கொண்டு பழகிவந்தனர்.

ஆனால் சமீப காலமாக இச்சமூக வலைதளங்களில் பல முறை கேடுகள் நடப்பதால் பலர் வாழ்க்கையே தொலைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.


இந்நிலையில் பெற்றோரின் கண்டிப்பு உள்ளிட்ட காரணத்தால் கடந்தாண்டில் மட்டும் பேஸ்புக்கில் இருந்து 30 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியேறியுள்ளனர் என்பது “டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்” என்ற ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும் அமெரிக்காவில் தான் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் பேஸ்புக்கில் இருந்து வெளி வந்துள்ளனர்.

எனினும் உலகளவில் 4.29 கோடி உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பேஸ்புக்கின் தலைமை நிதி அதிகாரி டேவிட் எபர்ஸ்மேன் கூறுகையில், பேஸ்புக்கின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நிறுவனத்தின் பங்கு விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Comments