
தொடர்ந்து கவர்னர் பேச்சுக்களின் அம்சங்கள் வருமாறு:
* தொழில் - பொருளாதாரத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது
* 2014- 2015 ஆண்டில் திட்டச்செலவு 42 கோடியே 185 லட்சமாக இருக்கும்
*மாநில உணவு தான்ய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டும்
*அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இது பாராட்டுக்குரியது
*விளையாட்டை ஊக்கப்படுத்த வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் வரை நிதியுதவி
*காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரியது
*காவிரி நிதிநீர் ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் உறுதியான செயல்பாடு
*முதல்வரின் சீரிய நடவடிக்கையால் சட்டம் -ஒழுங்கு நிலை
*மின் பற்றாக்குறையை போக்குவதில் தமிழக அரசு நல்ல நடவடிக்கை
*மாநிலத்தில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு இணையதளம் உருவாக்கப்படும்
*திருவிழாக்கள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.
*வீடுகளுக்கே சென்று பட்டா வழங்கப்படுகிறது.
* 3.72 லட்சம் பேருக்கு விலையில்லா ஆடுகள்
*ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி செய்வதில் முதலிடம்
*போலீஸ் துறை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது
*போலீஸ் துறையில் 24 ஆயிரத்து 503 பேர் கூடுதல் பணியாளர்கள் நியமனம்
*போலீசாரின் தொடர் கண்காணிப்பினால் மாவோ., நக்சல்கள் தளம் அமைக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
*வறட்சி நிவாரண பணிகளுக்கு 1, 614 கோடி ஒதுக்கீடு
* நீண்ட காலம் இலங்கை சிறையில் வாடிய 295 மீனவர்கள் இது வரை மீட்கப்பட்டுள்ளனர்.
*நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பங்கை வாங்கியதில் சாதனை
*முதல்வரின் அறிவார்ந்த தீர்வால் தொழிலாளர் போராட்டம் தவிர்ப்பு
*உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்ட பணிக்கு பாராட்டு
தி.மு.க., வெளிநடப்பு : தமிழக அரசின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் மு.க., ஸ்டாலின் தலைமயில் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து அவைக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில்: தமிழக அரசின் அறிவிப்புகள் மரபு மீறிய செயலாக உள்ளது. முறைப்படி எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. பெயரளவில் சபைக்கு வெளியே முதல்வர் அறிவித்து விடுகிறார். இதனை கண்டித்து நாங்கள் சபையை புறக்கணித்தோம் என்றார்.
Comments