சென்னை: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவை கேட்கவில்லை என்று தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னை அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை
சந்தித்த கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும்
தேமுதிக.,வுடனான கூட்டணி குறித்து சஸ்பென்ஸ் நிலையை கையாண்டு வருகிறார்.
கருணாநிதி பேட்டி : ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுக கேட்கவில்லை, என கருணாநிதி தெரிவித்தார்.
தேமுதிகவிடம் ஆதரவு கேட்கப்பட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு
பதிலளித்த அவர், பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும், '' லோக்சபா
தேர்தலில் கூட்டணிக்காக தேமுதிகவிடம் உரிய முறையில் முறைப்படி அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது; அதிமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி
வைத்துள்ளதற்கு மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள்'' என்றும் தெரிவித்தார்.
மேலும், வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் தூக்கு தண்டனை ரத்து
செய்யப்பட்டது் மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை
வரவேற்கிறேன் எனவும் கருணாநிதி கூறி உள்ளார். கருணாநிதி பேட்டி : ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுக கேட்கவில்லை, என கருணாநிதி தெரிவித்தார்.
பா.ஜ., கருத்து : கூட்டணி குறித்து பா.ம.க., மற்றும் தேமுதிக., வுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு உள்ளதாக இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.,விற்கு பாமக மற்றும் ஐஜேகே கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்அவர்கூறுகையில்,தேசத்திற்கு எதிராக சந்திப்பவர்களே மோடியை எதிர்ப்பவர்கள் என்றார்.
ஆய்வில் தகவல் : லோக்சபா தேர்தலில் தமிழகத்தை பொறுத்த வரை அனைத்துக் கட்சிகளும் தனித் தனியே போட்டியிட்டால் அதிமுகவே அதிக இடங்களை பெறும் என தனியார் டிவி நடத்திய தேர்தல் புள்ளி விபர ஆய்வில் தெரிய வந்துள்ளது. புள்ளி விபர அறிக்கையின்படி, அதிமுகவுக்கு 15 முதல் 23 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும், அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு வலை விரிக்கும் தேமுதிகவுக்கு பெரிய அடி கிடைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக.,விற்கு அடுத்த இடத்தில் திமுக.,விற்கு 7 முதல் 13 இடங்கள் கிடைக்கலாம் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று முதல் 5 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு 4 முதல் 10 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக டாப் : தமிழகத்தில் 27 சதவீதம் ஓட்டுக்கள் அதிமுக.,விற்கும், 18 சதவீதம் ஓட்டுக்கள் திமுக.,விற்கும், 16 சதவீதம் ஓட்டுக்கள் பா.ஜ.,விற்கும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பிரதமர் கனவை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி லோக்சபா தேர்தலில் தனது நிலை மற்றும் கூட்டணி விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். திமுக- பா.ஜ., கூட்டணி அமைந்தால் 19 சதவீதம் ஓட்டுக்களும், திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் 17 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் சிறிய மாற்றம் ஏற்படும் பட்சத்தில் தேசிய அரசியலில் ஜெயலலிதாவிற்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு கூறுகிறது.
Comments