புதுடில்லி: போராட்ட விவகாரத்தில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன், மத்திய
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சமரசம் செய்து கொண்டதால், காங்.,
துணைத் தலைவர் ராகுல், கடும் அதிருப்தி அடைந்து உள்ள தாக, தகவல்
வெளியாகியுள்ளது.
டில்லியில், தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு நாள் தர்ணா போராட்டம்நடத்தினார்.
சம்பந்தப்பட்ட போலீசாரை
விடுப்பில் அனுப்புவதாக, மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த
தலைவருமான, சுஷில்குமார் ஷிண்டே உறுதி அளித்தார். இதையடுத்து, கெஜ்ரி வால்,
போராட்டத்தை கைவிட்டார்.இந்நிலையில், கெஜ்ரிவாலுடன், சுஷில்குமார் ஷிண்டே,
சமரசத்தில் ஈடு பட்டது, காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு, கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.டில்லியில், தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு நாள் தர்ணா போராட்டம்நடத்தினார்.
இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:கெஜ்ரிவாலின் போராட்டம் முடிந்ததும், அன்று இரவே, காங்., மூத்த தலைவர்களுடன், ராகுல் ஆலோசனை நடத்தினார். இதில், சுஷில்குமார் ஷிண்டேயும், பங்கேற்றார்.அப்போது, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா மற்றும் தன்னை கலந்தாலோசிக்காமல், சுஷில்குமார், இந்த விஷயத்தில் முடிவெடுத்ததற்கு, ராகுல், அதிருப்தி தெரிவித்தார். போராட்டத்தின் விளைவுகளை, கெஜ்ரிவால் எதிர்கொள்ளாமல் தப்பிப்பதற்கு, ஷிண்டேயின் சமரசம், வழி செய்து விட்டதாக, ராகுல் கூறினார்.இவ்வாறு, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments