சென்னை: விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ஜில்லா படம் ரிலீஸான நான்கு
நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது.
விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த
10ம் தேதி ரிலீஸான படம் ஜில்லா. பொங்கல் ஸ்பெஷலாக அஜீத்தின் வீரம் படத்தோடு
சேர்ந்து ரிலீஸானது.
ஜில்லா படத்தின் கல்லா விவரங்களை பார்ப்போம்.
ஜில்லா படம் ரிலீஸான முதல் நாள் தமிழகத்தில் ரூ.7 கோடி வசூல் செய்தது.
ஜில்லாவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து விஜய்யும், தயாரிப்பாளர்
ஆர்.பி.சௌத்ரியும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜில்லா ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 34 கோடி
வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ரூ.14.5 கோடி
வசூலித்துள்ளது ஜில்லா.
கேரளாவில் ஜில்லா வசூலில் சக்கை போடு போடுகிறது. ஜில்லாவில் மலையாள
சூப்பர் ஸ்டார் மோகன் லால் இருப்பது படம் கேரளாவில் வசூலை அள்ளுவதற்கு ஒரு
காரணம் என்றால் விஜய்க்கு சேட்டன் ரசிகர்கள் பலர் இருப்பது மற்றொரு காரணம்
ஆகும்.
மதுரை, நெல்லை மாவட்டங்களில் ஜில்லாவுக்கு அமோக வரவேற்பு
கிடைத்துள்ளது. படத்தில் விஜய் மதுரைக்காரராக கெத்தான கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments