
ஜெ. அலை வலுவாக வீசுகிறது
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், அதிமுகவும் வலுவானவர்களாக இருப்பதாக
சர்வே தெரிவிக்கிறது. எனவே அதிமுகவுக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்றும்
இது கணித்துள்ளது.
பலமுனைப் போட்டி
தமிழகத்தைப் பொறுத்தவரை வருகிற லோக்சபா தேர்தலில் பலமுனைப் போட்டி என்பது
உறுதியாகி விட்டது. இந்த போட்டியில் அதிமுகவுக்கு சாதகமாக வாக்காளர்கள்
வாக்களிப்பார்களாம்.
27 சதவீத வாக்குகள்
அதிமுகவுக்கு 27 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். கடந்த 2009 தேர்தலில் 25
சதவீத வாக்குகளை அள்ளிய திமுக இந்த முறை 18 சதவீத ஓட்டுக்களையே பெறும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு நல்ல வளர்ச்சி
அதேசமயம் கடந்த 2009 தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளையேப் பெற்றிருந்த
பாஜக இந்த முறை அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது 16 சதவீத
வாக்குகளை இது பெறுமாம்.
காங்கிரஸுக்கு 17 சதவீதம்
அதேசமயம், அனைத்துக் கட்சிகளாலும் கைவிடப்பட்ட காங்கிரஸ் கட்சி பாஜகவை விட
முன்னணியிலேயே உள்ளது. அக்கட்சிக்கு 17 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
தேமுதிகவுக்கு 3...
இது ஷாக்
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தேமுதிகவுக்கு 3 சதவீத வாக்குகளே
கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இது ஆச்சரியமாக
இருக்கிறது. வழக்கமாக 8 சதவீத அளவுக்கு இக்கட்சி வாக்குகளைப் பெறும் என்பது
நினைவிருக்கலாம். ஆனால் அடியோடு சரிந்து 3 சதவீதமே கிடைக்கும் என்று தகவல்
சொல்லியிருப்பது ஆச்சரியம்தான்.
அட.. ஆம் ஆத்மிக்கும் 3 சதவீதம்
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கும் இந்த முறை வாக்குகள் விழப் போகின்றன. அதாவது இந்தக் கட்சிக்கு 3 சதவீத வாக்குகள் கிடைக்குமாம்.
பாமக - வி.சி -இடதுசாரிகளுக்கு மொத்தமாக 3 சதவீதம்
மற்றபடி பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகியோருக்கு ஒன்று முதல் 3 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
அதிமுக அரசே பெட்டர்
கடந்த திமுக அரசை விட தற்போதைய அதிமுக அரசே சிறப்பாக இருப்பதாக 35 சதவீதம்
பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக அரசு பெட்டர் என்று கூறியவர்கள்
எண்ணிக்கை 24 சதவீதமாகும்.
கிராமப்புறங்களில்தான் ஜெ.வுக்கு செல்வாக்கு அதிகம்
தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில்தான் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிக செல்வாக்கு
காணப்படுகிறது. அங்கு அவரைத்தான் மக்கள் அதிக அளவில் நேசிக்கின்றனர்.
அதாவது 43 சதவீத அளவுக்கு ஜெயலலிதாவுக்கு ஊரகப் பகுதிகளில் ஆதரவு
காணப்படுகிறது.
நகர்ப்புறத்தில் ஆதரவு குறைவு
அதேசமயம், நகர்ப்புற தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு 27 சதவீத ஆதரவே காணப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகம்
அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த வாக்காளர்கள் மத்தியில் இந்தக்
கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க ஆதரவு அதிகம் காணப்படுகிறது. அதாவது 34
சதவீத ஆதரவு காணப்பட்டது.
திமுக - காங். கூட்டணிக்கு ஆர்வம்
அதேபோல திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடையே இந்த இரு
கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்க ஆதரவு காணப்படுகிறது. 27 சதவீதம் பேர்
இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மீனவர், விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க அதிமுகவே சரி
தமிழக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிமுகவே
பொருத்தமான கட்சி என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மீனவர்
பிரச்சினையை ஜெயலலிதா தீர்ப்பார் என்று 23 சதவீதம் பேரும், விவசாயிகள்
பிரச்சினையை அதிமுக தீர்க்கும் என்று 24 சதவீதம் பேரும் கருத்து
தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு இந்த இரு பிரச்சினைகளிலும் தலா 16 சதவீத
ஆதரவு கிடைத்துள்ளது.
அதிமுக அரசின் செயல்பாடு குறித்து அதிருப்தி வலுக்கிறது
அதேசமயம், அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தி மாநிலத்தின் பல
பகுதிகளிலும் வலுத்து வருகிறது. 60 சதவீதம் பேர் அரசின் செயல்பாடு
மகிழ்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இது 65
சதவீதமாக இருந்தது. 30 சதவீதம் பேர் திருப்தி தரவில்லை என்று
தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டு 28 சதவீதமாக இருந்தது.
ஜெயலலிதாவுக்கு அமோக ஆதரவு
அதிமுகவை விட ஜெயலலிதாதான் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக உள்ளார்.
அதாவது ஜெயலலிதா சிறப்பாக செயல்படுவதாக 64 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
திருப்தி இல்லை என்று 26 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வளரும் பாஜக
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி கண்டு வருவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. மேலும் நரேந்திர மோடிக்கு இ்ங்கு ஆதரவும் பெருகி வருகிறதாம்.
பிரதமராக மோடிக்கே ஆதரவு அதிகம்
தமிழக வாக்காளர்கள் மத்தியில் நரேந்திர மோடி பிரதமராகவே அதிக ஆதரவு
காணப்படுகிறதாம். 17 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாக கருத்து
தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவு குறைவு
அதேசமயம், மோடியைப் போலவே பிரதமர் கனவுடன் காய் நகர்த்தி வரும் முதல்வர்
ஜெயலலிதாவுக்கு 8 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்திக்கு 11 - சோனியாவுக்கு 7- கருணாநிதிக்கு 1
ராகுல் காந்திக்கு 11 சதவீத ஆதரவும், திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு சதவீத
ஆதரவும் கிடைத்துள்ளது. சோனியா காந்திக்கு 7 சதவீத ஆதரவும், மன்மோகன்
சிங்குக்கு 6 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளன.
ஜெ. பிரதமராக பாஜகவினர் எதிர்ப்பு
பாஜகவினர் மத்தியில் ஜெயலலிதா பிரதமராவதற்கு கடும் எதிர்ப்பு
காண்பபடுகிறது. அதாவது 36 சதவீதம் பேர் ஜெயலலிதா பிரதமராகக் கூடாது என்று
கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெ. மீதான மக்கள் நம்பிக்கை அதிகரிப்பு
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் தரும் இன்னொரு செய்தி அவர் மீதான மக்கள்
நம்பிக்கை இன்னும் தகராமல் இருப்பது. அதாவது இப்போது சட்டசபைத் தேர்தல்
நடத்தப்பட்டால், மீண்டும் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என பலரும்
தெரிவித்துள்ளனர். அதாவது 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாக்களிக்க மாட்டோம் என்று 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது கடும் அதிருப்தி
பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு
மீது மக்கள் கடும் கடுப்புடன் உள்ளனர். அரசின் நடவடிக்கைகள் திருப்தி
தருவதாக 32 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்
சிறப்பாக செயல்படுவதாக 33 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஆட்சி தொடரக் கூடாது
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்று 48 சதவீதம்
பேரும், மீண்டும் ஆட்சிக்கு வரட்டும் என்று 19 சதவீதம் பேரும்
கூறியுள்ளனர்.
ஆம் ஆத்மியைக் கேள்விப்பட்டிருக்கிறோமே...
ஆம் ஆத்மி குறித்த கேள்விகளுக்கு ஓரளவுக்கு அக்கட்சிக்கு ஆதரவான பதில்களே
வந்துள்ளன. அந்தக் கட்சியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பதாக 47 சதவீதம் பேர்
தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் பேர் தங்களது தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிட
வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் வெறும் 10 சதவீதம் பேர் அந்தக்
கட்சிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர்.
அதிமுகவுக்கு 15 முதல் 23 சீட்
ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், அதிமுகவுக்கு வருகிற
நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 39 இடங்களில் 15 முதல் 23 இடங்கள் வரை
கிடைக்கலாம்.
திமுகவுக்கு 7 முதல் 13
திமுகவுக்கு 7 முதல் 13 இடங்கள் வரை கிடைக்கலாம்.
காங்கிரஸுக்கு 1 முதல் 5
காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று முதல் 5 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்பு
உள்ளது. இதுவே அக்கட்சிக்கு அதிகம் என்பதால் இந்த வெற்றியே
ஆச்சரியமானதுதான்.
மற்றவர்களுக்கு 4 முதல் 10
மற்ற கட்சிகளுக்கு அதாவது பாஜக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு 4 முதல் 10 இடங்கள் வரை கிடைக்கலாம்.
Comments