
இதற்கான அறிவிப்பை இத்துறைக்கான அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்தார்.
இவரும் அமைச்சர் மணீஷ் திவாரியும் இணைந்து நிருபர்களிடம் கூறியதாவது:
நியாயமான
கோரிக்கை: ராகுலின் கோரிக்கை நியாயமானது. இவர் மக்கள் பிரதிநிதி. அவர்
ஒன்றை சொல்கிறார் என்றால் அதில் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
இதனடிப்படையில் தான், இந்த விஷயம் பரிசீலித்து, முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. மானியத்துடன் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் என
வழங்கப்பட்டது. இனி 12 சிலிண்டராக வழங்கப்படும். மாதம் ஒரு சிலிண்டர்
வீதம் பெற்று கொள்ளலாம். பிப்ரவரி 1 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு
வருகிறது.
மான்யவிலை சிலிண்டர்களால் ஏற்கனவே அரசுக்கு 80 ஆயிரம்
கோடி செலவு இருந்து வந்தது. 12 ஆக உயர்த்துவதன் மூலம் அரக்கு கூடுதலாக 5
ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஆதார் திட்டம் மூலம் மானியம் பெறுவது
குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்படும். தற்போது ஆதார் அட்டை
மூலம் காஸ் பெறுவது, ஆதார் மூலம் மானியம் பெறுவது முறையாக
அமல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ராகுல்
பேசுகையில்; பிரதமர் ஜி மக்களுக்கு வழங்கும் 9 சிலிண்டரை 12 ஆக
உயர்த்துங்கள் என்று ஓப்பனாக கோரிக்கை வைத்தார்.
Comments