ஜில்லா படம் 7 நாட்களில் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக, அந்தப்
படத்துக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் ஆகிய இரு படங்களும்
வெளியாகின. இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால்,
இரண்டும் வெற்றிப் படங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.
இதுவரை ஜில்லாவுக்கு ரூ 40 கோடிக்கு மேலும், வீரத்துக்கு அதைவிட ஓரிரு
கோடிகள் குறைவாகவும் வசூலாகியுள்ளதாக தெரிய வருகிறது.
சில இணைய தளங்களில் ஜில்லா 70 கோடி குவித்துவிட்டதாகவும், வீரம் ரூ 58 கோடி
குவித்துள்ளதாககவும் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ரூ 100 கோடி
இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ஜில்லாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்
பக்கத்தில், அந்தப் படம் ரூ 100 கோடியை வெறும் 7 நாட்களில்
குவித்துவிட்டதாக ஒரு படத்தை டிசைன் செய்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
உண்மையான வசூல் என்ன?
இது சாத்தியமா? அந்தப் படத்தின் உண்மையான வசூல் என்ன? என்ற கேள்விகளை இந்த போஸ்டர் கிளப்பியுள்ளது.
சாத்தியமா?
பொதுவாக ஒரு படம் ரூ 100 கோடி வசூலைத் தொட, உலகம் முழுக்க 3500
அரங்குகளுக்கு மேல் வெளியாகி, ஒரு வாரத்துக்கு மேல் ஹவுஸ்புல் காட்சிகளாக
ஓடியிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நூறு கோடி வசூல் சாத்தியம்.
1200 அரங்குகள்தான்
ஆனால் விஜய்யின் ஜில்லா அதிகபட்சமாக 1200 அரங்குகளில்தான் வெளியானதாக அதன்
தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். விநியோகஸ்தர்களோ, 1075 அரங்குகளில்தான்
ஜில்லாவை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இத்தனை குறைந்த அரங்குகளில்
வெளியிட்டு எப்படி ரூ 100 கோடி கல்லா கட்டியிருக்க முடியும்?
வீரம்...
1000 அரங்குகளில்தான் வீரம் படமும் வெளியாகியுள்ளது. எப்படியும் அடுத்த சில
தினங்களில் அந்தப் படமும் ரூ 100 கோடி வசூலித்துவிட்டதாக போஸ்டர்
அடித்தாலும் ஆச்சர்யமில்லை!
ஆரம்பம் வசூல்
அதற்கு முன் வெளியான ஆரம்பம் 800 அரங்குகளில்தான் வெளியானது. ஆனால் அந்தப்
படமும் ரூ 100 கோடி வசூலித்துவிட்டதாக அடித்துவிட்டது நினைவிருக்கலாம்.
Comments