கடந்த தேர்தல் மூலம், மாற்றத்தை எதிர்பார்த்த மக்களை, ஜெயலலிதா ஏமாற்றி
விட்டார்,'' என, ஏற்காடு தொகுதி பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.ஏற்காடு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் மாறனை ஆதரித்து, ஸ்டாலின், 21 கிராமங்களில், நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் கருணாநிதி. இங்கு, தேர்தலுக்காக வரவில்லை.
தமிழகத்தில், கொலை, கொள்ளை அதிகரித்து விட்டது. சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது. ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டு போட்ட மக்களை, ஜெயலலிதா ஏமாற்றி விட்டார். இது, ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல; அவருடைய அராஜக ஆட்சிக்கு, கொடுங்கோல் ஆட்சிக்கு, பாடம் புகட்ட, புத்தி புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் முகத்திரையை கிழிக்க இடைத்தேர்தல் வந்திருக்கிறது; நல்ல சந்தர்ப்பம்; நழுவ விடாதீர்கள். இவ்வாறு, அவர் பேசினார்.
Comments