இந்த ஆண்டின் நிஜமான வெற்றிப் படங்களில் ஒன்றான வருத்தப்படாத வாலிபர்
சங்கம் இன்று நூறாவது நாளைத் தாண்டியது.
சிவகார்த்திகேயன் - புதுமுகம் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க, அவர்களுடன்
சத்யராஜ், சூரி ஆகியோர் நடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
புதுமுக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரூ 12 கோடி
செலவில் உருவானதாக கூறப்பட்டது.
ரூ 30 கோடி
ஆனால் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்று ரூ
30 கோடி வரை சம்பாதித்துள்ளது. இந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படங்களில்
ஒன்றாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கொண்டாடப்படுகிறது இந்தப் படம்.
ஸ்ரீதிவ்யா
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் ஒரு முழு நீள
காமெடிப் படம் ஆகும். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய ஸ்டார்
அந்தஸ்தை இந்தப் படம் தந்துள்ளது. அவருடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இந்த ஒரே
படத்தில் முன்னணி நடிகையாகிவிட்டார். இப்போது அவர் படுபிஸி தமிழில்!
சிவகார்த்திகேயன் நன்றி
இந்தப் படத்தின் நூறாவது நாள் குறித்து தனது மகிழ்ச்சியை இணையதளத்தில்
வெளிப்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இதில் நடித்த நடிகர்,
நடிகைகள் அனைவருக்கும் மற்றும் திரைத்துறை குழுவினருக்கும் தனது நன்றியைத்
தெரிவித்துள்ளார்.
ஹாட்ரிக் வெற்றி
சிவகார்த்திகேயனுக்கு இது ஹாட்ரிக் வெற்றி. அவர் நடித்த, 'கேடி பில்லா
கில்லாடி ரங்கா' மற்றும் 'எதிர் நீச்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து
'வருத்தப்படாத வாலிபர் சங்கமும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.
பாடலும் ஹிட்..
தொலைக்காட்சிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும் வீஜேவாக அறிமுகமானவர்
சிவகார்த்திகேயன். திரைப்படத் துறையில் ஹீரோவாக காலூன்றிய அவர்,
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இமானின் இசையில் பாடகராகவும் புதிய
அவதாரம் எடுத்து வெற்றிப் பெற்றுள்ளார். ஊர காக்க உண்டான சங்கம் பாடலும்
மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments