சென்னை: விரல் வித்தை நடிகரின் காதலியான புஸுபுஸு நடிகைக்கு ஹோட்டலில்
அறையை புக் செய்வதற்குள் தயாரிப்பாளர்களுக்கு மூச்சு வாங்குகிறதாம்.
புஸுபுஸு நடிகை விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். இடையில்
அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால் அதை
சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவிட்டனர்.
நடிகை முன்பெல்லாம் தனது டாக்டர் அம்மாவுடன் படப்பிடிப்புக்கு வருவார்.
ஆனால் தற்போது தனியாக வந்து போகிறாராம். இனி அம்மாவுக்கு செலவு செய்ய
வேண்டியது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு
விட்டுள்ளனர். ஆனால் அந்த பெருமூச்சு நிலைக்கவில்லையே.
நடிகை தான் தங்கும் ஹோட்டல் அறையின் எண்களை கூட்டினால் 9 என்று வரும்
அறையில் தான் தங்குவேன் என்று அடம் பிடிக்கிறாராம். இதனால் கூட்டு எண் 9
வரும் அறைகளையே தயாரிப்பாளர்கள் தேடிப்பிடிக்கிறார்களாம். அந்த 9 கூட்டுத்
தொகை வரும் அறை கிடைப்பதில் பெரும்பாடாக உள்ளதாம். அப்படியே கிடைத்தாலும்
அது சூட்டாகவோ, இருவர் தங்கும் அறையாகவோ உள்ளதாம்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பில் எகிறிவிடுகிறதாம். அம்மா வரவில்லை செலவு
குறையும் என்று நினைத்தால் பட்ஜெட்டை எகிற வைக்க எப்படி எல்லாம் வழி
கண்டுபிடிக்கிறார் நடிகை என்று தயாரிப்பாளர்கள் அலுத்துக் கொள்கிறார்களாம்.
Comments