புதுடில்லி: கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று
ஜார்கண்ட் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலுவுக்கு இன்று
சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவு தமக்கு மகிழ்ச்சி
அளிப்பதாக மத்திய அமைச்சர் கபில்சிபல் கருத்து கூறியுள்ளாளர். 70 நாட்கள்
சிறைவாசம் இருந்த லாலு இன்றோ அல்லது நாளையோ விடுதலையாவார் என தெரிகிறது.
கடந்த 1990 முதல் நடந்த ஊழல் மத்திய கணக்காயம் மூலம் வெளி உலகிற்கு வந்தது.
பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து ஆதாரங்கள் திரட்டியது.
மொத்தம் பல பிரிவுகளாக நடந்த ஊழலில் 950 கோடி ஸ்வாகா செய்யப்பட்டது. இதில்
லாலுவுக்கு 37.75 கோடி ஊழல் பங்கு.
கடந்த அக். 3 ம் தேதி ராஞ்சி கோர்ட் நீதிபதி பவேஸ்குமார், லாலுபிரசாத்
யாதவிற்கு ( வயது 66) 5 ஆண்டு சிறைத்தண்டனையும், மேலும் இந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறையும்,
லாலுவுக்கு ரூ. 25 லட்சம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
கீழ் கோர்ட்டில் பல முறை ஜாமின் மனு தாக்கல் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் லாலுவுக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
இந்த ஜாமின் தமது கட்சிக்கும் தமக்கும் பெரும் ரிலீப்பை தந்துள்ளது என லாலு மகன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் கபில்சிபல் தனது கருத்தில் சட்டப்படி லாலுவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
அவசர சட்டம் வாபஸ்: 2
ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் எம்.பி. பதவி இழப்பர் என்ற சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பின்படி பதவி இழந்த 2 வது நபர் என்ற இடத்தை பிடித்தார் லாலு .
பதவி பறிக்கப்படும் என்ற மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு
வருவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
ஆனால் ராகுல் இது நான்சென்ஸ் தனமானது என கூறியதால் அவசர சட்டத்தை மத்திய
அரசு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கபில்சிபல் லாலு ஜாமினை
வரவேற்றுள்ளார்.
ஐக்கிய ஜனதாதள எம்.பி., சிவானந்த்
திவாரி லாலுவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது கவலை ச்சி அளிப்பதாகவும் ,
கொலைகாரர்களும், கொள்ளை காரர்களும் ஜாமினில் வெளிவருவது ஒன்றும்
ஆஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு கூறியுள்ளார். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த
எம்.பி., ராம்கோபால் யாதவ் கூறுகையில் இது முன்கூட்டியே நடந்திருக்க
வேண்டும் என்றார்.
Comments