
தாழ்வு பகுதி : தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான, மடி புயல், தொடர்ந்து வலுகுன்றி, தற்போது, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுகுன்றி மறையும். இதன் காரணமாக தமிழகத்திற்கு கிடைக்கும் மழை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
கடந்த, 24 மணி நேரம், அதாவது, நேற்று காலை வரை, நாகை மற்றும் கல்பாக்கத்தில், ? செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சென்னையில், 3 மி.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த, 24 மணி நேரம் அதாவது, இன்று, தமிழகத்தின் அனேக இடங்களில் மழைக்கும், வட கடலோர பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
காற்று அதிவேகமாக வீசும் என்பதால், வட கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்; தென் கடலோர மீனவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மழை பெய்யும்; தரைக்காற்று அவ்வப்போது பலமாக வீசக் கூடும். இவ்வாறு, அவர் கூறினார்.
பருவமழை எப்படி? : வடகிழக்கு பருவமழைக் காலம் குறித்து ரமணன் மேலும் கூறுகையில், டிசம்பர் மாதத்தில், வட பகுதியை விட, தென் பகுதி அதிக மழையைப் பெறும். சூரியன் தென் அரைகோளத்தில் சென்று மறைவதால், இந்தநிலை, பருவமழைக் காலம் என்பது, டிசம்பர் வரை; பருவக்காற்று காலம், ஏப்ரல் மாதம் வரை இருக்கும். சில நேரங்களில், மார்ச் மாதம் வரை கூட மழை இருக்கும். நிகழ்வுகள் அடிப்படையில் மழையை எதிர்பார்க்கலாம், என்றார். இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, மதுரை, மீனாட்சியம்மன் கோவிலை இடி தாக்கியது.
Comments