தென்னிந்திய சினிமாவில் உடல் பெருத்த கவர்ச்சி கதாநாயகிகளுக்கு எப்போதுமே
வரவேற்பு இருந்து வருகிறது. நமீதா என்ட்ரி ஆனபோதும் இதே வரவேற்பு
கொடுத்தனர். என்னம்மா இருக்குது இந்த பொண்ணு. சும்மா குதிரை மாதிரி என்று
கிறங்கிப்போன கோலிவுட் இயக்குனர்கள் வாட்டசாட்டமான கதாநாயகர்களுக்கு
அவரை ஜோடி சேர்த்தனர்.அதனால் சில காலம் கவர்ச்சி கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்தார் நமீதா. ஆனபோதும், அவரிடமிருந்து எதிர்பார்த்தபடி பர்பாமென்ஸ் வெளிப்படாததால், வெயிட்டான கதாபாத்திரங்களை அவரை நம்பி யாரும் கொடுக்கவில்லை.
ஆனபோதும், கோடம்பாக்கவாசியாகி இங்கேயே டேரா போட்ட நமீதா, தனது உடல் எடையை குறைக்க தீவிரமான முயற்சிகள் எடுத்துப்பார்த்தார். ஆனால், பலன் கிடைக்கவில்லை. அதனால் தற்போது உடல் கொழுப்பை நீக்கும் ஒரு சிகிச்சை எடுத்துக்கொண்டு ஸ்லிம் பிகராக மாறியுள்ளார். இதனால் ஆரம்பத்தில் சினிமாவில் என்ட்ரி ஆனபோது எப்படி இருந்தாரோ அதேபோல் கிக் ஏற்படுத்தும் சிக்கென்ற பிகராகி விட்டார் நமீதா.
இந்த செய்தி இலைமறை காய்மறையாக கோலிவுட்டில் பரவியதைத் தொடர்ந்து சில இயக்குனர்கள் நமீதாவை அழைத்து அடுத்த ரவுண்டுக்கு கோதாவில் இறக்கி விட போட்டோசெஷன் நடத்தி வருகிறார்கள்.
Comments