கோவா: சக ஊழியரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கில், தெஹல்கா
வார இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு முன்ஜாமின் வழங்க கோவா செஷன்ஸ்
கோர்ட் மறுத்ததையடுத்து, அவரை கோவா போலீசார் இன்று கைது செய்தனர்.பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்காவின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியதன் பேரில் நேற்று
தொடர்ந்து தேஜ்பால் முன்ஜாமின் மனு மீதான விசாரணை கோவா செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இரவு வரை நீடித்த இந்த விசாரணையின் முடிவில், தேஜ்பாலின் முன்ஜாமின் மனுவை நீதிபதி நிராகரித்தார். இதைத்தொடர்ந்து தேஜ்பாலை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தவுள்ள போலீசார், தொடர்ந்து, வழக்கு குறித்து விசாரிக்கவுள்ளனர்.
Comments