தத்தெடுத்து வளர்த்த ஆண் குழந்தையை, அடித்து, உதைத்து கொடுமைப்படுத்திய
பெண்ணுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மீட்கப்பட்ட குழந்தை
காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சேலம், பான்னம்மாபேட்டையை சேர்ந்தவர்
பழனியப்பன்; இவரது மனைவி கவுசல்யா, 52. இருவருக்கும் இடையே, கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால், சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த
தம்பதியின் ஒரே மகன், திருமணமாகி, பெங்களூரில் வசிக்கிறார்.இந்நிலையில், நேற்று காலை, அந்தக் குழந்தை அழுத போது, ஆத்திரமடைந்த கவுசல்யா, குச்சியால் உடல் முழுவதும் அடித்து காயப்படுத்தினார்; மேலும், குழந்தையின் தலையை, சுவற்றில் முட்டி காயப்படுத்தினார்.
குழந்தையின் கடும் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர், அங்கு வீட்டிற்கு சென்று பார்த்த போது, குழந்தை காயமடைந்து துடித்து கொண்டிருந்தது. உடன் அனைவரும் சேர்ந்து, கவுசல்யாவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அத்துடன், போலீசாருக்கும், குழந்தைகள் நல காப்பகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், கவுசல்யாவிடம் விசாரணை நடத்தினர். குழந்தையை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Comments