வாஷிங்டன்: கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளியே கொண்டு
செல்லப்பட்ட கறுப்பு பணம் சுமார் 4 லட்சம் கோடி என குளோபல் பைனான்சியல்
இன்டக்ரிடி ஆய்வி் மூலம் தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும்
24 சதவீதம் அதிகமாகும். மேலும் கறுப்பு பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பி
வைக்கப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது.
மொத்த பட்ஜெட்டில் ஒரு பங்கு:
கடந்த
2011-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த பட்ஜெட் 13 லட்சம் கோடியாகும். ஆனால்
வெளியேறியே கறுப்பு பணத்தின் மதிப்பு மட்டும் சுமார் 4 லட்சம் கோடி . இது
இந்திய பட்ஜெட்டின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். வெளியேறி பணத்தின்
மூலம் கல்விக்காக ஐந்து மடங்கும், கிராமப்புற மேம்பாட்டிற்காக 14 மடங்கு
வரையிலும் செலவிட்டிருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
இந்தியாவி்ல் இருந்து வெளியேறிய கறுப்பு பணத்தின் மதிப்பு கடந்த 2002-ல் 7.9 பில்லியன் அமெரிக்க டாலரில் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து 2009-ம் ஆண்டை தவிர 2011-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் 84.9 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து வந்துள்ளது.
வர்த்தக மாற்றங்கள் மூலமாக :
இந்தியாவில் இருந்த வெளியே கொண்டு செல்லப்பட்ட கருப்பு பணத்தி்ன
மதிப்பானது வர்த்தக மாற்றங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு
நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை
சுங்கத்துறையில் அதிகரித்து காட்டச் செய்தும் அதே போல் ஏற்றுமதி
செய்யப்படும் பொருட்களின் மதிப்பை குறைத்து காண்பிக்க செய்தும்
இரண்டிற்குமான இடைவெளியில் கிடைக்கும் லாப பணத்தை ஹவாலா பணமாக வெளியே
கொண்டு செல்லப்பட்டுள்ளது எனசர்வதேச நிதி ஆணையத்தின் முன்னாள் பொருளாதார
அறிஞர் தேவேந்திர தெரிவித்துள்ளார்.
இத்தகைய போக்கு வளரும் நாடுகளில் காணப்படுவதாகவும், கடந்த 2010-ம் ஆண்டை காட்டிலும் 2011-ம் ஆண்டில் இதன் வளர்ச்சி 14 சதவீதம் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டு்ள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு கறுப்பு பணத்தை அனுப்பி வைப்பதில் ரஷ்யா 191 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தையும், சீனா 151 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாவது இடத்தையும், இந்தியா 85 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
2002-2011 வரையிலான இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்தியா குற்றம் வரிஏயப்பு போலி ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகள் மற்றும் ஊழல் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தின் மதி்ப்பு சுமார் 15.7 லட்சம் கோடியாகும்.
Comments