
இஸ்லாமாபாத்: இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கரை புகழ வேண்டாம்'
என, பாகிஸ்தான் ஊடகங்களை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கேட்டுள்ளது.
இந்தியாவின்
புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர், டெண்டுல்கர், கடந்த, 16ம்தேதி,
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது சாதனையை பாராட்டி, மத்திய அரசு,
அவருக்கு, "பாரத ரத்னா' விருது அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது,
உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். டெண்டுல்கர் ஓய்வு
பெற்றதை
நினைவு கூறும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள, "டிவி' சேனல்கள், அவருக்கு
புகழாரம் சூட்டின. இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும், "இன்சாப்' என்ற
பத்திரிக்கை, "டெண்டுல்கர் போன்றவர்கள் தினமும் பிறப்பதில்லை' என,
குறிப்பிட்டிருந்தது. இந்த புகழாரத்தால் கடுப்பாகி போன, தலிபான் பயங்கரவாத
அமைப்பின் தகவல் தொடர்பாளர், ஷாகிதுல்லா வெளியிட்டுள்ள வீடியா அறிக்கையில்
குறிப்பிடுகையில், ""இந்தியாவை சேர்ந்த டெண்டுல்கரை, பாகிஸ்தான் ஊடகங்கள்
வானளாவ புகழ்வது துரதிருஷ்டவசமானது; இதே ஊடகங்கள், பாகிஸ்தான் கிரிக்கெட்
அணி கேப்டன், மிஸ்பா உல் ஹக்கை கண்டனம் செய்கின்றன. மிஸ்பா உல் ஹக்
பாராட்டப்பட வேண்டும்; ஏனென்றால் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்,'' என்றார்.
Comments