காதல் செய்வது என்பது மிகவும் எளிது. ஆனால் அந்த காதலை வெற்றியடையச்
செய்வது தான் மிகவும் கஷ்டம். அந்த கஷ்டமான செயலையும் எதிர்த்து போராடி
திருமணம் வரை வந்துவிட்டால், அதன் பின் வாழும் வாழ்க்கையே ஒரு சுகம் தான்.
இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், காதல் செய்த பின்னர், அந்த காதலை
பெரும்பாலான ஆண்களின் வீடுகளில் ஏற்றுக் கொள்வார்கள். சிக்கல் இருக்கும்
பக்கம் என்றால் பெண்களின் வீடுகளில் தான். அதிலும் காதலிக்கும் பெண்ணின்
வீட்டில் ஒப்புக்கொண்ட பின்னர், அந்த பெண் தந்தை மகளாக இருந்தால், ரொம்பவே
கஷ்டம்.
ஏனெனில் அனைத்து தந்தைகளுக்கும், தன் மகள் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான
இடத்தில் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று நினைப்பார்கள். அதனால், தனக்கு
வரப்போகும் மருமகன் எப்பேற்பட்டவன் என்பதை அனைத்து பெண்ணின் தந்தைகளும்
கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் ஏதேனும் சிறு தவறு வரப்போகும்
மருமகனின் மீது இருந்தால், பின் அப்பெண்ணின் தந்தையை திருப்தி அடைய வைப்பதே
கடினமாகிவிடும். எனவே காதலித்த பின்னர், காதலியின் தந்தையை சந்திக்க
போகும் போது, எப்படியெல்லாம் நடந்து கொண்டால், அவர்களை எளிதில் மடக்கலாம்
என்று சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, மனதில் கொண்டு
நடந்தால், ஈஸியாக மாமனாரை மடக்கிவிடலாம்.
காதலிக்கும் பெண்ணின் தந்தையை எளிதில் மடக்குவதற்கான சில டிப்ஸ்...
* மாமனாரை முதன்முதலாக பார்க்கப் போகும் போது, ஷேவிங் செய்து, நன்கு அழகாக
சர்ட்-பேண்ட் அணிந்து, பார்த்ததும் பிடிக்கும் மாதிரி உடை அணிந்து செல்ல
வேண்டும். இதனால் அவரின் மனதில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க முடியும்.
* பேசும் போது படபடப்பு இல்லாமல் பேச வேண்டும். அவரை நல்ல மதிப்புமிக்க
நண்பன் போல் நினைத்து, அவரிடம் பேச வேண்டும். மேலும் பேசும் போதே, அவரது
மனதில் "இந்த பையனுக்கு குடும்பத்தில் ஒன்றாவதில் ஆர்வமாக இருக்கிறான்"
என்னும் எண்ணம் வருமாறு பேச வேண்டும். அதைவிட்டு, தம்மை தாமே புகழ்ந்து
பேசக் கூடாது. இவ்வாறு பேசினால், கெட்ட எண்ணம் தான் எழும். எனவே கவனமாக
இருக்க வேண்டும்.
* முக்கியமாக எதிர்காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தில் நல்ல நிலையில்
வருவதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைப் பற்றியும் பேசினால், அவரது
மனதில் நல்ல ஒரு தரமான இடத்தைப் பெற முடியும். மேலும் அவருக்கு "என் மகளை
ஒரு நல்ல இடத்தில் தான் கொடுக்கிறோம்" என்று உங்களின் மீது ஒரு நம்பிக்கை
எழும்.
* மாமனாரைப் பார்க்கச் செல்லும் போது, அவருக்கு முன்பே நீங்கள் உங்கள்
காதலியின் மீதுள்ள அன்பை வெளிக்கொணர வேண்டும். அதற்காக கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துவிடாதீர்கள். உங்கள் காதலி வரும் போது, அவரிடம் பேசும்
பாவணையில், செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக, காதலி காபி கொண்டு
வரும் போது, அவர் கொண்டு வரும் தருணம் சற்று விழ நேர்ந்தால், அப்போது உடனே
அவர்களை தாங்கியோ அல்லது அந்த காபியை வாங்கி டேபிளில் வைத்து உட்காருமாறு
சொல்லியோ வெளிப்படுத்தலாம். இதனாலும் மாமனாரை மடக்கலாம்.
* இறுதியில் ஒன்றை சொல்ல மறக்க வேண்டாம். அது என்னவென்றால், மாமனாரிடம்
நீங்கள் உங்கள் காதலி மீது வைத்துள்ள அன்பை, அவருடன் எவ்வாறு வாழ
ஆசைப்படுகிறீர்கள் என்பதை மனம் உருகி சொன்னால், நிச்சயம் அவர் உங்கள்
பாசத்தைப் புரிந்து, அவரது மகளை சந்தோஷத்துடன் திருமணம் செய்து கொடுப்பதாக
வாக்கு கொடுப்பார்.
இவை அனைத்தையும் மனதில் கொண்டு நடந்து கொண்டால், மாமனாரை எளிதில்
கவிழ்த்து, காதலில் வெற்றி அடையலாம்.
Comments