இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து, பா.ஜ., சார்பில்
நடக்கும் போராட்டங்களில், அக்கட்சியுடன் இணைந்து போராட தே.மு.தி.க., தலைமை,
ரகசிய ஆதரவு தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்து இயக்க
பிரமுகர்கள் கொலையை கண்டித்து, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து
வருகின்றன.
இந்த சந்திப்பு குறித்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: ஆடிட்டர் ரமேசுக்கு விரோதிகள் இல்லை என்றே கூறலாம். கோபமாக இருந்தாலும், முன்முறுவலை மட்டுமே அவரது முகத்தில் பார்க்க முடியும். இந்து கொள்கைகளை, அவர் தீவிரமாக கடைப்பிடித்தார். விஜயகாந்த், உத்தரவின் பேரில், அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.அவரது குடும்பத்தினருக்கு, நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க., கிளைச் செயலர் கூட, இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனமும், நேரில் அஞ்சலியும் தெரிவிக்கவில்லை.இந்த பிரச்னையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்வதற்காக, மனிதாபிமான அடிப்படையில், தே.மு.தி.க.,வும் போராடும். பா.ஜ., மட்டுமல்ல, இது தொடர்பாக எந்த கட்சியுடனும் இணைந்து போராடுவதற்கு, தே.மு.தி.க., தயாராக உள்ளது.நீதி கோருவது நல்ல விஷயம் என்பதால், இதற்கு ஆதரவு தெரிவிக்க விஜயகாந்த் தயங்க மாட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments