போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான
போட்டியின்போது ஒரு கேட்ச்சை தவற விட்டது தொடர்பாக இந்திய வீரர்கள் சுரேஷ்
ரெய்னாவும், ரவீந்திர ஜடேஜாவும் கடுமையானவாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று போர்ட் ஆப்ஸ்பெயினில் இந்தியா,மேற்கு இந்தியத் தீவுகள்
அணிகள் மோதின. அப்போட்டியின்போது, 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா
வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டியின்போது ஒரு கேட்ச்சை தவற விட்டது தொடர்பாக
ரெய்னாவுக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே கடும்வாக்குவாதம் நடந்தது.
யூடியூப் மூலம் அம்பலம்
இந்த சண்டை தொடர்பான வீடியோக் காட்சி யூடியூபில் வெளியாகி பலரும் அதைப் பார்த்து வருகின்றனர்.
சுனில் நரைன் தொடர்பாக
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் சுனில் நரைன், ஜடேஜா வீசிய பந்தை
இஷாந்த் சர்மா கேட்ச் செய்தார். அதன் பிறகுதான் இந்த சண்டை நடந்துள்ளது.
கிட்ட போய் வார்த்தையை விட்ட ஜடேஜா
நரைன் அவுட்டான பின்னர் ரெய்னாவிடம் சென்ற ஜடேஜா, அதற்கு முன்பு தான் வீசிய
ஓவரில் நரைன் கொடுத்த நல்ல கேட்ச்சை தவற விட்டது தொடர்பாக ஆவேசமாக
பேசினார். அதற்கு ரெய்னாவும் பதிலளித்து சூடாகப் பேச நிலைமை மோசமானது.
குறுக்கே புகுந்து தடுத்த கோஹ்லி
இருவரும் கடுமையாக மோதிக் கொள்வதைப் பார்த்த கேப்டன் விராத் கோஹ்லி வேகமாக
அருகில் சென்று ரெய்னாவைஅமைதிப்படுத்தி ஜடேஜாவையும் விலக்கி விட்டார்.
ஆனா கடைசி விக்கெட்டில் ஜாலி பேச்சு!
இருப்பினும் இந்த கோபம் ரொம்பநேரம் நீடிக்கவில்லை. கடைசி விக்கெட்டையும்
எடுத்து இந்தியா வெற்றி பெற்ற பிறகு ஜடேஜாவிடம் சென்ற ரெய்னா, அவரது
கழுத்தை தனது கையால் கட்டிக் கொண்டு பொறுமையாக பேசினார். அதன் பின்னர்
இருவரும் சிரித்தபடியே பெவிலியன் திரும்பினர்..
அட போங்கப்பா நீங்களும் உங்க சண்டையும்...!
Comments