படுக்கை அறையில் தம்பதியர் போடும் சந்தோச சப்தங்கள் சங்கீதமாக
ஒலிக்குமாம். மாறாக அமைதியாக கடனே என்று செயல்படுவது கூடாது என்கின்றனர்.
படுக்கை அறையில் ஆணோ அல்லது பெண்ணோ சந்தோஷமாக இல்லை என்பதை அறிய சில
அறிகுறிகள் இருக்கிறதாம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும்
சரி, அவரவர் ஆசை பூர்த்தியாகாத வரை உறவுகள் கசப்பாகவே தொடரும்.
படுக்கை அறையில் பலருக்கு பல நேரங்களில் மோசமான கசப்பான அனுபவங்கள்
ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பத்து காரணங்களைச் சொல்கிறார்கள் செக்ஸாலஜி
நிபுணர்கள்.
எனவே கீழ்கண்ட தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா? என்று உங்களுக்கு நீங்களே
ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ளுங்களேன்.
ஆர்வத்தோடு அணுகுங்கள்
படுக்கை அறை என்பது நம்முடைய உடல், மனம் இரண்டும் ஒன்றினைந்து ஈடுபாட்டோடு
செயல்பட வேண்டிய இடம் யில் பலரும் அங்கு கடனே என்று தொடங்குவார்கள்.
பெரும்பாலோனோர் செய்யும் தவறு இதுதான். அதை கலையாக செய்யாமல், கடமைக்காக
செய்யும்போதுதான் கசப்புகள், அதிருப்திகள் தலை தூக்குகின்றனவாம். ஆர்வம்
குறைந்திருக்கும்போது செக்ஸில் ஈடுபட்டாலும் கூட கசப்புணர்வே மிஞ்சுமாம்.
எனவே துணையை ஆர்வத்தோடு அணுகுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
புதுசா செய்யுங்க பாஸ்...
சாப்பாடு விசயத்திலேயே வெரைட்டி பார்க்கிற உலகம் பாஸ் இது. பெட்ரூமில்
வெரைட்டி அவசியம். ஆனால் பலருக்கும் இது புரிவதில்லை. ஒரே மாதிரியான செக்ஸ்
உறவிலேயே ஈடுபடுவார்கள். இது போகப் போக கசப்பையும், சலிப்பையும் தரத்
தொடங்கி விடும். எனவே புதியதாக கிரியேட்டிவாக இருங்கள். இல்லையெனில் செக்ஸ்
சலிப்பாகி விடும்.
எனக்கு மட்டுமே தெரியும்
பெரும்பாலான ஆண்களுக்கு எல்லாம் எனக்கு மட்டுமே தெரியும் என்பது போன்ற
மனநிலைதான் செக்ஸ் விஷயத்தில் உள்ளது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு
செக்ஸ் குறித்து நிறையத் தெரியும். இதை ஆண்கள் அறிந்து கொள்வதில்லை அல்லது
ஏற்பதில்லை. இதுவும் கூட கசப்புணர்வுகளுக்கு வித்திடுகிறதாம்.
தயக்கம் தடையாகலாமா
பெரும்பாலான பெண்களுக்கு படுக்கை அறையில் தாராளமாக, சுதந்திரமாக நடந்து
கொள்வதில் தயக்கம் உள்ளதாம். நிர்வாணமாக இருப்பது, புதிய முயற்சிகளுக்கு
ஒத்துழைப்பு தருவது, விளக்கை அணைத்து விட்டு என்னை அணையுங்கள் என்று
வற்புறுத்துவது என்று அவர்கள் செய்யும் காரியங்களால் ஆண்கள் டென்ஷனாகி மூட்
அவுட் ஆகி விடுகிறார்களாம்.
தேவையை உணர்த்துங்கள்
என்ன வேண்டும், என்ன தேவை, எப்படித் தேவை என்பது குறித்து பெரும்பாலான
பெண்கள் கணவர்களிடம் அல்லது தங்களது துணையிடம் சொல்லத் தயங்குகிறார்களாம்.
இப்படிச் செய்தால் எனக்கு கிளர்ச்சி கூடும். இதைச் செய்தால் எனக்கு மூட்
வேகமாக வரும் என்பதைச் சொல்லி இன்பத்தை கேட்டுவாங்கத் தயங்கக் கூடாது
என்பது ஆண்களின் கருத்தாக உள்ளது.
சிலிர்ப்பூட்டுங்கள்
படுக்கை அறையில் அதிக அளவிலான சிலிர்ப்பூட்டல்கள் உறவை பலப்படுத்த
உதவுமாம். வெறுமனே உடல் உறவோடு நிற்காமல் பேச்சிலும், செயலிலும்
கிளர்ச்சியூட்டும் பல காரியங்களைச் செய்யும்போது பெண்கள் குளிர்ந்து போய்
விடுகிறார்களாம்.. இன்பம் மலரச் செய்கிறார்களாம். இப்படி இல்லாத பெண்களால்
ஆண்களுக்கு கஷ்டம்தான் ஏற்படுகிறதாம்.
சங்கீத சப்தங்கள்
படுக்கை அறையில் பேசாமல் அமைதியாக கம்மென்று பலர் இன்பம் அனுபவிப்பார்கள்.
அது தவறாம். மாறாக முக்கல், முனகல், சின்னதாக கத்துவது, உணர்ச்சிகரமாக
கூச்சலிடுவது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இந்த சப்தங்கள்தான் படுக்கை
அறையில் சங்கீதமாக ஒலிக்கும். அதோடு இது ஆண்களைத் தூண்டுவிக்க
உதவுமாம்.இப்படி இல்லாமல் தேமே என்று மரக்கட்டையாக படுத்துக் கிடப்பது
ஆண்களுக்கு சங்கடத்தையே கொடுக்கிறதாம்.
கண்ட்ரோல் பண்ணுங்க
செக்ஸ் விளையாட்டு மூலமும், உறவின் மூலமும் துணையைக்
கட்டுப்படுத்துவது..அதாவது நம் ஆட்டத்திற்கு அவரை வளைய வர வைப்பது தனி கலை.
நிறையப் பேருக்கு இந்தக் கலை கை கூடுவதில்லை. சிலருக்கு மட்டுமே வரும்.
மாறாக படுக்கை அறையில் சரண்டாரவது போல நடந்து கொண்டால் பலருக்கும் அது
பிடிப்பதில்லையாம்.
ஆராய்ச்சி வேண்டாமே
படுக்கை அறையில் செக்ஸ் குறித்த ஆராய்ச்சியில் சிலர் இறங்குவார்கள். அது
தேவையில்லாதது... இன்பத்தை மட்டுமே அங்கு அனுபவிக்க வேண்டும், அலசி
ஆராய்ந்து பார்ப்பது வேலைக்கு ஆகாது என்பது நிபுணர்களின் கருத்து.

Comments