
மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்.,கட்சி ஆளும் இந்த மாநிலத்தில் .
பலக்ககட்டங்களாக நடந்து வரும் இந்த தேர்தலில் இன்று 4ம் கட்ட தேர்தல் நடக்க
இருக்கிறது. முன்னதாக முர்சிதாபாத் மாவட்டத்தில் இன்று வன்முறை
வெடித்தது. காங்.,மற்றும் மார்க்., கம்யூ கட்சியை சேர்ந்தவர்கள் கப்சாதங்கா
என்னும் கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் நாட்டு
வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். சுந்துர்பூர்
கிராமத்தில் நடந்த மோதலில் 2 பேர் நாட்டு வெடிகுண்டுக்கு பலியாயினர்.
பசந்த் பகுதியில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயமுற்றனர். மல்டா
மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 5 பேர் காயமுற்றனர்.
இதனையடுத்து மோதல் நடந்த கிராமங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதிகள் கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
மம்தா மதம் பிடித்த யானை :
இந்த
மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து மத்திய அமைச்சர் ஆதிரஞ்சன் சவுத்ரி
கூறுகையில்: மாநிலத்தில் நடக்கும் மோதலுக்கு ஆளும் திரிணாமுல் காங்.,
தொண்டர்களே காரணம். குண்டர்களுக்கு பின்னால் மாநில அரசு இருக்கிறது. மம்தா
ஒரு மதம் பிடித்த யானை போல செயல்படுகிறார். முடிந்தால் என்னை கைது செய்து
பார்க்கட்டும் இவ்வாறு மம்தா கூறினார்.
Comments