இந்தியவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்
திருவனந்தபுரம்: சீனாவின் ஆய்வு நிறுவனமான
ஹூருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் கேரள
மாநிலத்தவர் மூவர் இடம் பெற்றிருக்கின்றனர்.
ஹூருன் வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலிம் ரிலையன்ஸ் குழுமத்தின்
முகேஷ் அம்பானிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. இந்நிறுவனம்
வெளியிட்டிருக்கும் நீண்ட பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த மூவரின் பெயரும்
இடம் பிடித்திருக்கிறது.
கேரள மும்மூர்த்திகள் யார்?:
இன்போசிஸ் நிறுவனத்தின் எஸ்.கோபாலகிருஷ்ணன்,
முத்தூட் நிறுவனத்தின் ஜார்ஜ் முத்தூட், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும்
பி.என்.சி. மேனன் ஆகியோர் பெயர் இடம் பெற்றிருக்கிறது.கேரள பணக்காரர்களின் சொத்து மதிப்பு
முத்தூட் நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜார்ஜ் முத்தூட்டின் சொத்து மதிப்பு ரூ. 4,200 கோடி.நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அதிபர் பி.என்.சி. மேனனின் சொத்து மதிப்பு ரூ. 2,000 கோடியாகும்.
இவர்களில் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments