புதுக்கோட்டை: விஜயகாந்த் கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. தான் உண்மையில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று மாநில பாஜக முன்னாள் தலைவரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒரு ஆண்டு ஆன பிறகும் அங்கு வாழும் அப்பாவித் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கவில்லை.
தமிழர்கள் கட்டும் வீடுகளில் புத்தர் சிலை வைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்தியாவில் இருந்து செல்லும் பிரதிநிதிகள் இதை ஆழ்ந்து கவனிப்பதில்லை.
திமுக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர், பாஜகவை மதவாத கட்சி. பாபர் மசூதி மற்றும் குஜராத் கலவரங்கள் மீண்டும் வேண்டுமா என்று பேசியது கண்டிக்கத்தக்கது. பாஜகவை அவர் சீண்டுவது சரியல்ல. தற்போது குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கூட மோடியை ஏற்றுக் கொள்கின்றனர்.
கூடங்குளம் அணு மின் நிலையம் வர வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதை தடுக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகாந்த் கட்சி சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால், இந்த அளவு சீட்டுகளில் வென்றிருக்காது. அவரது கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. தான் உண்மையில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.
தமிழகத்தில் அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது அரசுக்கு கேடு. தமிழகத்தில் மூன்றாவது அணி வர வாய்பில்லை என்றார்.

Comments