மும்பை : சில்லரை வணிகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான காலாண்டு வருமானத்தை நிறுவனங்கள் பெற்றதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று 209 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 208.76 புள்ளிகள் உயர்ந்து 18,057.33 புள்ளிகளாகவும், நிஃப்டி 60.25 புள்ளிகள் உயர்ந்து 5476.30 புள்ளிகளாகவும் உள்ளன.
Comments