சென்னை : இலங்கை தமிழர்கள் முகாம்களில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக, முதல்வருக்கு சோனியா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பாக, திருச்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், கடந்த அக்டோபர் 8ம் தேதி, கடிதம் ஒன்றை முதல்வர் கருணாநிதி அளித்தார். இந்த கடிதத்துக்கு, சோனியா காந்தி, கடந்த அக்டோபர் 29ம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் சோனியா கூறியிருப்பதாவது:இலங்கை தமிழர்கள் 30 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் இருப்பதாகவும், அவர்களது மறுவாழ்வு தொடர்பாக கவலை தெரிவித்து தாங்கள் கடிதம் கொடுத்திருந்தீர்கள். இப்பிரச்னையில் தங்களை போலவே எனக்கும் கவலை உள்ளது.அங்கு அவர்கள் எதிர் கொள்ளும் கஷ்டத்தை போக்கவும், சகஜ நிலைக்கு திரும்பவும் அனைத்துவித மனிதாபிமான மற்றும் மறுவாழ்வு உதவிகளை நமது அரசு செய்து வருகிறது. இதுதவிர, இடம் மாறிய தமிழர்களின் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு பிரச்னைகளையும் அணுகுவதோடு, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் கட்டுமானப் பணிகளில் இலங்கை அரசுடன் உரிய மட்டத்தில் இந்திய அரசு உதவி வருகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களது முகாம்களில் இருந்து விரைவாக வெளியேறுவர்.இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார்.

Comments