கோவை: நாடாராளுமன்றக் கூட்டம் அமைதியாக நடப்பதற்காகவே ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தனது கட்சிப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ நிருபர்களிடம் பேசுகையி்ல்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் மிக பிரமாண்டமானது. உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் இந்த அளவு ஊழல் நடந்ததில்லை.
2007ம் ஆண்டு மே மாதம் ராசா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் இந்த திட்டமிட்ட ஊழல், அனைத்து சட்ட விதிகளையும் மீறி அரங்கேறியுள்ளது.
நாடாராளுமன்றம் அமைதியாக நடப்பதற்காக ராசா ராஜினாமா செய்துள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறுவது நகைச்சுவையாக உள்ளது.
இந்த ஊழல் பணம் ராசாவுக்கு மட்டும் சேரவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வோம். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார் வைகோ.

Comments