ஐ.நா., நிரந்தர உறுப்பினர் பதவி : இந்தியாவுடன் ஆலோசனை நடத்த சீனா தயார்

பீஜிங் : ஐ.நா., சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்படுவது குறித்து இந்தியாடுடன்  ஆலோசனை நடத்த தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பார்லிமென்டில் பேசும்போது, ஐ.நா.,சபையில்  இந்தியா உறுப்பினர் பதவி பெறுவதற்கு ஆதரவு தெரவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரவித்துள்ள சீனா, இந்தியாவின் உணர்வுகளை உணர்ந்து கொள்வதாகவும், உறுப்பினர் பதவி குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்த தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது.  இது குறித்து சீன வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐ.நா.,வில் இந்தியாவின் சிறப்பாக பணியாற்றுவது குறித்து இந்தியாவின் உணர்வுகளை சீனா புரிந்து கொள்கிறது. இது தொடர்பாக  இந்தியா உட்பட பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்த தயாராக உள்ளோம். ஐ.நா., சபையில் வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அதனை மறுசீரமைக்க  வேண்டும் என்பதற்கு சீனா ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளது.

Comments