கோவை:'இன்டிகோ' விமான நிறுவனம் தனது சேவையை கோவையில் இருந்து சென்னை, டில்லிக்கு விரிவாக்கம் செய்துள்ளது. வரும் 30ம் தேதியில் இருந்து 'இன்டிகோ' கோவையில் இருந்து விமான சேவையை வழங்குகிறது.
சர்வதேச விமான நிறுவனங்கள் சார்பாக, விமானப் போக்குவரத்து சேவைகளில் 19 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள இன்டர்க்ளோப் என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் 'இன்டிகோ' விமான சேவை துவக்கப்பட்டது. இந்நிறுவனம் 31 ஏர்பஸ் ஏ 320 ரக புதியவிமானங்களை சொந்தமாக வைத்துள்ளது.தினமும் 207 முறை பல்வேறு வான்வழித்தடங்களில் இயக்கி வருகிறது. இந்தியாவின் அகர்தலா, அகமதாபாத், பெங்களூரு, புவனேஷ்வர், சென்னை, டில்லி, கோவா, குவாஹட்டி, திப்ருகர், ஐதராபாத், இம்பால், ஜெய்பூர், ஜம்மு, கொச்சி, கோல்கட்டா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, புனே, ஸ்ரீநகர் உள்ளிட்ட 23 நகரங்களில் 'இன்டிகோ' விமான சேவை உள்ளது.தற்போது இந்நிறுவனம் கோவையில் இருந்தும் தனது விமான சேவையை செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து 'இன்டிகோ' ஆதித்யகோஷ் நிருபர்களிடம் கூறியதாவது:'இன்டிகோ' நிறுவனம் தென்னிந்தியாவில் தனது சேவைகளை விரிவாக்க உள்ளது. சிக்கனமான கட்டணங்களால் நாங்கள் புகழ்பெற்றிருக்கிறோம். கோவையில் இருந்து சென்னை, டில்லிக்கு விமான சேவையை வரும் 30ம் தேதியில் இருந்து துவக்குகிறோம்.குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில் 99.91 சதவீத செயல் திறனை அடைந்திருக்கிறோம். மிகக்குறைந்த முன்பதிவுகளை மட்டும் ரத்து செய்த விமான நிறுவனம் என்ற பெயர் பெற்றிருக்கிறோம். அனைத்தையும் உள்ளடக்கிய மிகக்குறைந்த ஒரு வழிப்பயணக்கட்டணங்களை கோவையில் இருந்து அறிமுகப்படுத்துகிறோம். 14 நாட்களுக்கு முன்னர் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மிகக்குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு, 1,863 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் மாலை 4.50 மணிக்கும், வியாழன் அன்று மட்டும் 5.40 மணிக்கும் விமானம் புறப்படும்.
கோவையில் இருந்து டில்லிக்கு, 3,324 ரூபாய் கட்டணம். தினமும் காலை 11.20 மணிக்கும்; சென்னை வழியாக தினமும் மாலை 4.50 மணிக்கும், வியாழன் அன்று மட்டும் மாலை 5.40 மணிக்கும் விமானம் புறப்படும்.சென்னையில் இருந்து தினமும் இரவு 10.00 மணிக்கு கோவைக்கு விமானசேவை வழங்குகிறோம். அதேபோல், டில்லியில் இருந்து சென்னை வழியாக தினமும் மாலை 6.45 மணிக்கும்; சென்னை வழித்தடத்தில் அல்லாது தினமும் பகல் 1.20 மணிக்கும், வியாழன் அன்று மட்டும் பகல் 2.10 மணிக்கும் விமான சேவை உள்ளது.நாங்கள் மட்டுமே இவ்வளவு குறைவான கட்டணம் வசூலிக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்டிகோ வாடிக்கையாளர்கள், 10 ரூபாய் நன்கொடை வழங்குவதன் மூலம், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யும் சமூக சேவை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, ஆதித்யகோஷ் தெரிவித்தார்.

Comments