புதுடில்லி : தொலைத்தொடர்புத் துறையின், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் நீண்ட நாட்களுக்கு பின், பிரதமர் மன்மோகன் சிங், மவுனம் கலைத்துள்ளார். "ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு விவகாரத்தில் விவாதத்துக்கு தயார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பார்லிமென்ட் சுமுகமாக இயங்க, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என, பிரதமர் கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் கடும் நெருக்கடி கொடுத்தும் கூட, அவர் வாய் திறக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் பிரதமரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், நீண்ட நாள் மவுனத்துக்கு பின், இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசினார். டில்லியில் பத்திரிகை ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நேற்று கலந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் குறித்து, அரசின் பல்வேறு விசாரணை அமைப்புகள், விரிவான விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் யாராவது முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால், அவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவர். இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பார்லிமென்டில் எந்தவொரு விவாதத்துக்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும். தற்போது பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விரிவாக பேச விரும்பவில்லை. நாட்டில் என்ன பிரச்னை நடந்தாலும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் இருப்பதே, ஜனநாயகத்துக்கு நல்லது. பார்லிமென்ட் சுமுகமாக நடந்தால் தான், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியும். எனவே, பார்லிமென்ட் நடவடிக்கைகள் சுமுகமாக நடப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் லஞ்சம் தான், முக்கிய பிரச்னையாக உள்ளது. இதை சோதனைக் காலமாகவே கருத வேண்டும். பிரதமராக இருந்தாலும் கூட, சில நேரங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவனை போலத்தான் என்னை கருதுகிறேன். ஒரு தேர்விலிருந்து அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் செல்வதைப் போலவே, ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நான் போகிறேன். நம் நாட்டின் இளைஞர்கள், உயர்ந்த மதிப்பீடுகளை கொண்டவர்களாக உள்ளனர். இந்த மதிப்பீடுகள், நமக்கு நம்பிக்கையை தருகின்றன. இந்திய மக்கள் பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்பார்ப்பும், போட்டியும் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நாம்வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூற முடியாது. இருந்தாலும், இந்த பாதிப்பில் இருந்து, இந்தியா மிக விரைவாக மீட்சி கண்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 10 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி, தானாக ஏற்படாது. கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில்முதலீடுசெய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

Comments