மெல்போர்ன்: என்னால் இனியும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ முடியாது. அதேசமயம், சச்சின்
டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களாலும் கூட இனியும் தங்களது கிரிக்கெட்
வாழ்க்கையில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களாக திகழ்வது கடினம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்.
பான்டிங்கால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளார். ஆனால் அதை மறுத்துள்ளார் பான்டிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அது சரியான கணிப்புதான். ஆனால், அதை முழுமையானதாக எடுத்துக் கொள்ள முடியாது.
கடந்த காலத்தைப் போல என்னால் தலை சிறந்த பேட்ஸ்மேனாக இனியும் தொடருவது இயலாது என்றே கருதுகிறேன். கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தை நான் தாண்டி விட்டதாகவே கருதுகிறேன்.
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு காலம் உண்டு. அதிலும் உச்சகட்ட காலம் என்பது கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் உண்டு. அது எனக்கு முடிந்து விட்டதாக கருதுகிறேன். ஏன் சச்சின் டெண்டுல்கராலும் கூட இனியும் மிகப் பெரிய பேட்ஸ்மேனாக திகழ்வது என்பது கடினம்தான்.
கடந்த ஆண்டு அவர் 9 சதங்களை அவர் அடித்திருந்தாலும் கூட அது அவரது உச்ச கட்ட ஆட்டம் அல்ல என்பதை அவரே அறிவார். அவரது மிகச் சிறந்த ஆட்டமாகவும் அதை எடுத்துக் கொள்ள முடியாது.
அதுபோலத்தான் நான் இப்போது சிறப்பாக ஆடினாலும் கூட அது எனது உச்சகட்ட சிறப்பான ஆட்டமாக எடுத்துக் கொள்ளமுடியாது. இனியும் நான் சிறந்த ஆட்டத்தைத் தருவது என்பது இயலாத காரியம்.
அணியில் தொடர்ந்து இடம் பெறுவற்காக நான் தற்போது தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறேன், அவ்வளவுதான். சிறந்த கேப்டனாக, சிறந்த தலைவராக இன்னும் சில மாதங்கள் நான் தொடர்ந்து செயல்பட முடியும் என்று கூறியுள்ளார் பான்டிங்.
35 வயதான பான்டிங், தற்போது இந்தியாவுடன் நடந்து வரும் ஒரு நாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சச்சினுக்கும் ரெஸ்ட் கொடுத்துள்ளது இந்தியா.
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)

Comments