கருத்து கணிப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தல் கருத்து கணிப்பு (வேட்பாளர் அறிவிப்புக்கு முன்) - முடிவு


தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி அமைக்க போகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த கருத்து கணிப்பு கடந்த 1 வார காலமாக உங்கள் தமிழ் நியூஸ் 24X7 வெப்சைட்ல் நடந்து வந்தது.

இந்த கருத்து கணிப்பு, ஒவ்வொரு கட்சியின் நிலை, வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முந்தைய நிலையை பிரதிபலிக்கும்.

சுமார் 2918 பேர் இதில் தங்களின் வாக்கினை அளித்து இருந்தனர். ஒருவர் ஒரு ஒட்டு மட்டுமே போட கூடிய வகையில் இந்த கருத்து கணிப்பு நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற போவது யார்?

இந்த கேள்விக்கு திமுக தான் வெற்றி பெரும் என்று 88.1% மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தை அதிமுக (ஓ.பி.எஸ்.) அணி பெறுகிறது, அவர்களுக்கு 6% மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தை அதிமுக (சசி) அணி பெறுகிறது, அவர்களுக்கு 2.9% மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதிமுக (தீபா) அணி, பா.ஜ.க., மற்றும் நோட்டோவுக்கு தலா 1% பேர் வாக்களித்து இருக்கிறார்கள்.

இந்த கருத்து கணிப்பு முடிவு வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments